search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு ரெயில்"

    • ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார்.
    • அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரெயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

    குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர், ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார். அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது. ரெயிலை பார்த்ததும் தண்டவாளத்தில் இருந்து காரை கீழே இறக்க அவர் முயன்றுள்ளார். ஆனால் கார் தண்டவாளத்தில் சிக்கியது.

    தண்டவாளத்தில் கார் இருப்பதை பார்த்த ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    அப்போது சிலர் காரை தண்டவாளத்தை விட்டு வெளியே எடுக்க உதவி செய்தார்கள். கார் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்ததும் அந்த நபர் காரை வேகமாக ஓட்டி போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.

    இதையடுத்து போலீசார் அந்த காரை துரத்திச் சென்று பிடித்து அவரை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.

    ரயில் தண்டவாளத்தில் மக்கள் ரீல்ஸ் எடுப்பது ஒன்றும் இது முதல் முறை அல்ல. இம்மாதிரி ரீல்ஸ் எடுக்கும்போது பலரும் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • இரு ரெயில்களும் மோதிக்கொண்டதில் இரண்டு பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இரு ரெயில்களும் மோதிக்கொண்டதில் இரண்டு பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    ஆந்திரா நோக்கிச் சென்ற மைசூரு தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் கவரப்பேட்டை ரெயில் நிலையத்துக்கு அருகே  வந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த  சரக்கு ரெயில் மீது மோதியதில் இரண்டு ஏசி  பெட்டிகளில் தீப்பற்றியுள்ளது.

    பெட்டிகளில் பற்றியுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ரெயிலில் பயணித்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • மதுராவில் சரக்கு ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின.
    • இதனால் டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் ரோடு என்ற இடத்தில் சரக்கு ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் அப்பகுதி வழியாக செல்லும் 15 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், நேற்று மாலை பீகாரின் நாராயண்பூரில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


    • ரெயில் தனக்கு மேலே சென்று கொண்டிருப்பதை உணர்ந்து பதற்றம் அடைந்தாலும், அந்த பெண் அசையாமல் படுத்துக் கொண்டார்.
    • அவள் பாதுகாப்பாக தண்டவாளத்திலிருந்து எழுந்தாள்.

    தெலுங்கானா மாநிலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் வருவதை கண்ட பெண் துரிதமாக செயல்பட்டு தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் விகர்பாத்தின் நவாந்த்கியில் ஒரு பெண் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திடீரென ரெயில் ஒன்று வருவதை கவனித்தார். உடனே அந்த பெண் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார்.

    ரெயில் தனக்கு மேலே சென்று கொண்டிருப்பதை உணர்ந்து பதற்றம் அடைந்தாலும், அந்த பெண் அசையாமல் படுத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் அவள் தலையை தூக்க முயன்றாலும், அந்த சம்பவத்தை படமெடுக்கும் ஒருவர் அவளை தலையை கீழே வைக்கும்படி அறிவுறுத்துகிறார்.

    பதட்டமான சில நொடிகளுக்குப் பிறகு, ரெயில் கடந்து செல்கிறது. அவள் பாதுகாப்பாக தண்டவாளத்திலிருந்து எழுந்தாள். அவளது தோழியான மற்றொரு பெண், தண்டவாளத்தின் அருகே காத்திருப்பதை வீடியோவில் காண முடிகிறது.

    இந்த சம்பவம் உள்ளூர்வாசிகளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளது. அந்த பெண்ணின் சிந்தனை திறன் மற்றும் அதிர்ஷ்டம் அவரது உயிரை காப்பாற்றி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
    • கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்

    மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

    இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் மீது சரக்கு ரெயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று, மேற்கு வங்க தலைநகர் கல்கத்தாவில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த ரெயில் ஜார்கண்ட் மாநிலத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

    • கண்டெய்னர்கள் தண்டவாளத்தில் கவிழ்ந்ததால் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
    • சரக்கு ரெயில் விபத்தில் சிக்கியது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லியில் இருந்து அம்பாலா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியது. சரக்கு ரெயில் ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள தாரோரி அருகே சென்று கொண்டிருந்த போது அதிகாலை 4 மணி அளவில் விபத்துக்குள்ளானது.

    இதில் சரக்கு ரெயிலின் எட்டு கண்டெய்னர்கள் தண்டவாளத்தில் கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ரெயில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டெல்லி-அம்பாலா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தை நிறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து கண்டெய்னர்களை அகற்றவும், பாதையின் செயல்பாட்டை மீட்டெடுக்கும் பணிகளில் ரெயில்வே அதிகாரிகள். ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணியில் ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

    இந்த ரெயில் விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. உயிரிழப்புகளும் பதிவாகவில்லை. ஆனால் கண்டெய்னர்கள் தண்டவாளத்தில் கவிழ்ந்ததால் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    சரக்கு ரெயில் விபத்தில் சிக்கியது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென ரெயில் நகரத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் இறங்க முடியாமல் தவித்துள்ளான்.
    • சிறுவனை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த போலீசார், அச்சிறுவனை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ ஆலம்நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒளிந்து பிடித்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது யார் கண்ணிலும் சிக்காமல் இருப்பதற்காக முடிவு செய்த சிறுவன் அங்கு தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது ஏறி ஒளிந்துள்ளான். ஆனால் திடீரென ரெயில் நகரத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் இறங்க முடியாமல் தவித்துள்ளான்.

    பின்னர் ரெயிலின் சக்கரங்களுக்கு இடையே அமர்ந்து அழுதுகொண்டே பயணித்துள்ளான். அந்த ரெயில் ஹர்டோய் ரெயில் நிலையத்தை அடைந்த போது அங்கு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் சக்கரங்களுக்கு இடையே சிறுவன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அந்த சிறுவனை பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன் லக்னோவின் ராஜாஜிபுரத்தில் உள்ள பாலாஜி மந்திர் பகுதியை சேர்ந்த அஜய் என்பதும், ரெயில் சக்கரங்களுக்கிடையே அமர்ந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததும் தெரிய வந்தது. அந்த சிறுவனை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்த போலீசார், அச்சிறுவனை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை பணிநீக்கம் செய்து வடக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கினார். தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.

    சுமார் 80 கி.மீ. தூரம் வரை ஓடிய அந்த சரக்கு ரெயில் பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய சம்பவம் தொடர்பாக என்ஜின் டிரைவர் உள்பட 6 பேரை வடக்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

    இதுகுறித்த நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட என்ஜின் டிரைவர் அலட்சியமாக செயல்பட்டதே இச்சம்பவத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டது. இதனால் என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை சஸ்பெண்ட் செய்து வடக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜம்மு காஷ்மீரின் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
    • தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடியது

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

    அப்போது ரெயில் தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் ரெயில் டிரைவர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.

    78 கி.மீ. தூரம் வரை அந்த சரக்கு ரெயில் டிரைவர் இல்லாமல் ஓடிய நிலையில், பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

    டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஜம்மு கோட்ட ரெயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.

    • அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் இந்த ரெயிலை தனியாக 6-வது பிளாட்பாரத்தில் அனுமதித்தனர்.
    • நிலக்கரி இருந்த பெட்டியின் அடிப்பகுதியில் தீ எரிவது தெரியவந்தது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் வழியாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சேலம் அணுமின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது.

    அப்போது திருவள்ளூர் ரெயில் நிலையத்தை கடந்த போது கடைசி பெட்டியில் புகை வந்தது. இதைப் பார்த்த திருவள்ளூர் ரெயில் நிலைய போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் இந்த ரெயிலை தனியாக 6-வது பிளாட்பாரத்தில் அனுமதித்தனர்.

    பின்னர் அந்த ரெயிலின் கடைசி பெட்டியில் சோதனை செய்தனர்.

    நிலக்கரி இருந்த பெட்டியின் அடிப்பகுதியில் தீ எரிவது தெரியவந்தது. அந்தப் பெட்டியை தனியாக துண்டித்தனர்.

    உயர் மின்னழுத்த ஒயர்கள் இல்லாத பகுதிக்கு தீ பற்றிய பெட்டியை எடுத்துச் சென்றனர். பின்னர் அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவத்தால் நேற்று நள்ளிரவு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ரெயிலில் பற்றி எரிந்த தீயை கவனிக்காமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்து நிலக்கரி அழுத்தம் காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாக ரேனிகுண்டா செல்லும் சரக்கு ரெயில் வந்தது.
    • தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே மகேந்திரவாடி ரெயில் நிலையம் உள்ளது. இங்கு அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாக ரேனிகுண்டா செல்லும் சரக்கு ரெயில் வந்தது.

    அதிகாலை 4.20 மணி அளவில் மகேந்திரவாடி ரெயில் நிலையம் லூப் லைன் வழியாக வரும்பொழுது சரக்கு ரெயிலின் கடைசி பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன.

    இதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.

    லூப் லைனில் சக்கரங்கள் தடம் புரண்டதால் பிரதான தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு இல்லை.

    • தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் அருகே நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் நசுங்கியது.
    • சரக்கு ரெயில் விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து காயில் ஏற்றி வந்த சரக்கு ரெயில் காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலைத்தில் விபத்தில் சிக்கியது. தண்டவாளத்தில் இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

    வாகனங்கள் மீது ரெயில் மோதியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ரெயில் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்து நின்றது. சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×